×

சட்டத்தை அழித்து விட்டு மனுதர்மத்தை கொண்டுவர முயற்சி: கர்நாடக முதல்வர் சித்தராமையா காட்டம்

பெங்களூரு: மக்கள் பிரதிநிதிகள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் அரசியலமைப்பு சட்டத்தை வாசிக்கும் திட்டம் சர்வதேச ஜனநாயக தினமான செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை 10 மணிக்கு மாநில சமூகநலத்துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா தலைமையில் பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் அரசியல் சட்ட முன்னுரை வாசிக்கும் நிகழ்ச்சியை முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் வாசித்து தொடங்கி வைத்தனர். அப்போது சித்தராமையா பேசும்போது, நமது நாடு சுதந்திரம் பெற்றபின், தேசத்திற்கான அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர் அவர்களால் எழுதி சமர்பிக்கப்பட்டது.

அந்த சட்டம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட நாள் முதல் நாட்டில் ஜனநாயகம் மலர்ந்தது. அதன் மூலம் உலகளவில் மிக பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது நடந்த விவாதங்கள் மகத்தானது. நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற அம்சங்கள் நமது அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது. அப்போது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசிய சில மனுதர்மவாதிகளின் மனநிலை எப்படி இருந்ததது என்பது கால கண்ணாடியாக அந்நாளில் நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர்.

ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை அவர்களால் புறக்கணிக்க முடியவில்லை. அதற்கான கால சூழலும் தேசம் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. ஆனால் தற்போது அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு போதிய முன்னுரிமை கொடுக்காமல் உள்ளனர். இன்னும் சொல்லபோனால் அரசியலமைப்பு சட்ட விரோதிகள், நமது புனிதமான சட்டத்தை அழித்து விட்டு மனுதர்மத்தை கொண்டுவரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு நாம் வாய்ப்பு கொடுக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்றார்.

The post சட்டத்தை அழித்து விட்டு மனுதர்மத்தை கொண்டுவர முயற்சி: கர்நாடக முதல்வர் சித்தராமையா காட்டம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chief Minister ,Siddaramaiah Kattam ,Bengaluru ,International Democracy Day ,
× RELATED தேவகவுடா பேரன் பிரஜ்வலின் ஆபாச வீடியோ...